நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்!
கத்திக் கண்ணின் இருபுறம் தெரியும்!
நடக்கும் நடையில் வருபவன் புரியும்!
ஊரே பார்த்து ஓரமாய் ஒதுங்கும்!

இது என்ன கடவுளே!
புரியாது கடவுளே!
வேரோடு சாயும்! இந்த காடே தரையாகும்!

எதிராளி பார்க்கிறான்!
தெருவோரம் நிற்கிறான்!
மார்கெட்டில் முறைக்கிறான்!
என்னைப் போட்டுத்தள்ள துடிக்கிறான்!

எங்கேயும் வருகிறான்!
எமனாகத் தொடர்கிறான்!
முகமாற்றி அலைகிறான்!
என் கண்கள் பார்த்தால் மறைகிறான்!

அவன் முந்துவானா?
நான் முந்துவேனா?
நாளை ராத்திரி வந்தால் சொல்கிறேன்!

உடையும் மேகம் மழையாய் பொழியும்,
உதைக்கும் பந்துவேகமாய் போகும்.

இது என்ன கடவுளே!
புரியாது கடவுளே!
மண்ணில் உள்ள பெண்கள்,
கை கோர்த்து உடல் தின்னும்!

ஒரு கண்ணில் தூங்கிடு!
மறு கண்ணைத் திறந்திரு!
ஓய்வாகப் படுப்பது,
அது கல்லறையில் கிடைப்பது!

போகின்ற பாதைகள்,
பலபேரும் போனது!
புதிதாகப் பிறந்திட,
நான் புத்தனில்லை வழிவிடு!

இது அழித்தல் வேலை!
இந்த உலகின் தேவை!
அதை நாங்கள் செய்தால்,
ஊர்தான் வணங்குமா?

காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும்,
காத்திருக்காதே! கல்லடி கிடைக்கும்.

இது என்ன கடவுளே!
புரியாது கடவுளே!
ஒவ்வொரு நாளும் விடியல்,
கண் பார்த்தால் அது புதையல்!

______________________________________________


neruppu vaayinil oaramai eriyum
kaththi kannin irupuram theriyum
nadakkum nadaiyil varubavan puriyum
oore paarthu oaramaai othungum

idhu enna kadavule
puriyaathu kadavule
verodu saayum intha kaadae tharaiyaagum

ethiraali paarkkiraan
theru oram nirkkiraan
market il muraikkiraan
ennai pottu thalla thudikkiraan

engeyum varugiraan
emanaaga thodargiraan
mugamaattri alaigiraan
en kangal paarthaal maraigiraan

avan munthuvaana
naan munthuvenaa
naalai raathiri vanthaal solgiraen

udaiyum megam mazhaiyaai pozhiyum
udhaikkum panthu vegamaai pogum

idhu enna kadavule
puriyaathu kadavule
mannil ulla pengal
kai korthu udal thinnum

oru kannil thoongidu
maru kannai thiranthiru
oivaaga paduppathu
athu kallaraiyil kidappathu

pogintra paadhaigal
palaperum ponathu
puthithaaga piranthida
naan budhanillai vazhividu

ithu azhithal velai
intha ulagin thevai
athai naangal seithaal
oor thaan vanangumaa

kaattril kanigal vizhunthidum varaikkum
kaathirukkaathe kalladi kidaikkum

ithu enna kadavule
puriyaathu kadavule
ovvoru naalum vidiyal
kan paarthaal athu pudhaiyal

______________________________________