Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, October 28

adada agangaara lyrics-pithamagan tamil song lyrics

Song: Adada 
Singer: K.J.Yesudhas 

adada aghangaara arakka kaigaLil ulagingae 
azhikkum adhigaaram ivarku thandhavan yevan ingae 

vidavaay ivar thammai vendhu vaedikkai paarthidava 
mudamaay mudangaadhu mookar ivar dhammai mudithidava 
manidha kulathin thuNaiyoadi 
manadhai aRukkum raNamellaam 
iniyum varutha vida maattaen 
thaniyanaaga aRutheRivaen 
thaganam nadakkum idathil enadhu 
jananam endru purindhu koLLum manidhaa 

(adada aghangaara...) 

vaRumai thuRatha vaazhkaiyum thuRathida 
varaNdu poana manidhanum thuRathuvadhoa 
parivillaadha paavigaL thuRathida 
pathungi pathungi pagaivarum thuRathuvadhoa 
andhari vaaraagi saambavi amara soadhari 
amala jagajaala sooli sundhari nirandhari thurandhari 
vanaraaga sugumaari kowmaari 
iRangum nenju iRugudhu iRugudhu 
neruppu kanalil keedhiyai kaathidavae 
thoazh iraNdum thudikkudhu thudikkudhu 
dhroaga koottam thalaivadhai thaakkidavae 
vaiyamae vaanamae vaazhthidu 
theeyavai yaavaiyum maaythidu 
naaLai ulagil nall manidhan thoandrattumae 

(vidavaay ivar thammai...) 

kaatrai virattum sarughugaL uNdoa 
kadalil aadum alaigaLai thaduppadhuNdoa 
aatrai thiruppa seibavan uNdoa 
naetrai niRuthi pidithavan evanum uNdoa? 
poRiyarava mudithanae, veRuppu vizhi thudippavanae 
kari thoalai uduppavanae, puliyaadai udaiyavanae 
sudu kaadu thiribavanae, thirisoolam tharippavanae 
yezhu kadalgaL nenjil ezhundhadhu 
idi muzhakkam ennuL muzhangidudhey 
pidi padaadha paeyargaL ellaam 
podi podikka karangaL thudikkiRadhey 
thaduppavan evanada? thiRamudan thaaNdivaa 
yellaiyai enai thoda oruvan illai 
iruvan illai yevanum illaiyae...... 

(adada aghangaara...)

________________________

குரல்: K.J.ஜேசுதாஸ் 

அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே 
அழிக்கும் அதிகாரம் இவருக்கு தந்தவன் 
எவன் இங்கே விடவா 
இவர் தம்மை வெந்து வேடிக்கை பார்த்திடவா 
முடமாய் முடங்காது மூர்க்கர் இவர் தம்மை முடித்திடவா 
மனிதகுலத்தின் துணையோடி 
மனதை அறுக்கும் ரணமெல்லாம் 
இனியும் வருத்த விட மாட்டேன் 
தனியனாக அறுத்தெறிவேன் 
தகனம் நடக்கும் இடத்தில் எனது 
ஜனனம் என்று புரிந்து கொள் மனிதா 

(அடடா அகங்கார) 

வறுமை துரத்த வாழ்க்கையும் துரத்திட 
வறண்டு போன மனிதனும் துரத்துவதோ 
பரிவில்லாத பாவிகள் துரத்திடப் 
பதுங்கிப் பதுங்கிப் பகைவரும் துரத்துவதோ 
அந்தரி! வாராகி! சாம்பவி! அமர சோதரி 
அமல ஜெகஜ்ஜால சூலி! சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! 
வனராஜ சுகுமாரி! கௌமாரி! 
இரங்கும் நெஞ்சு இறுகுது இறுகுது 
நெருப்புக் கனலில் கீதையைக் காத்திடவே 
தோள் இரண்டும் துடிக்குது துடிக்குது 
துரோகக் கூட்டம் தொலைவதைப் பார்த்திடவே 
வையமே! வானமே! வாழ்த்திடு 
தீயவை யாவையும் மாய்த்திடு 
நாளை உலகில் நல்ல மனிதன் தோன்றட்டுமே 

(அடடா அகங்கார) 

காற்றை விரட்டும் சருகுகள் உண்டோ 
கடலில் ஆடும் அலைகளைத் தடுப்பதுண்டோ 
ஆற்றைத் திருப்பச் செய்பவன் உண்டோ 
நேற்றை நிறுத்திப் பிடித்தவன் எவரும் உண்டோ 
பொறியரவ முடித்தவனே 
நெருப்பு விழி துடிப்பவனே 
கரித்தோலை உடுப்பவனே 
புலியாடை உடையவனே 
சுடுகாடு திரிபவனே 
திரிசூலம் தரிப்பவனே 
ஏழு கடல்கள் நெஞ்சில் எழுந்தது 
இடி முழக்கம் என்னுள் முழங்கிடுதே 
பிடிபடாத பேயர்கள் எல்லாம் 
பொடி பொடிக்கக் கரங்கள் துடிக்கிறதே 
தடுப்பவன் எவனடா 
திறமுடன் தாண்டிவா எல்லையை எனைத் தொட 
ஒருவன் இல்லை இருவன் இல்லை 
எவனும் இல்லையே 

(அடடா அகங்கார)
_________________

1 comment:

Anonymous said...

Does any body know whose lyrics these are????

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels